சங்கீதம் 113:1-6
1
அல்லேலூயா, யெகோவாவின் பணியாட்களே, துதியுங்கள்; யெகோவாவினுடைய பெயரைத் துதியுங்கள்.
2
யெகோவாவின் பெயர் இப்பொழுதும், எப்பொழுதும் துதிக்கப்படட்டும்.
3
சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து அது மறையும் இடம்வரை யெகோவாவினுடைய பெயர் துதிக்கப்படட்டும்.
4
யெகோவா எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலாக இருக்கிறது.
5
நம்முடைய இறைவனாகிய யெகோவாவைப்போல் யாருண்டு? உன்னதத்தின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற அவரைப்போல் யார் உண்டு?
6
வானங்களையும் பூமியையும் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிற அவரைப்போல் யாருண்டு?
Settings