Skip to content

சங்கீதம் 113

உலகமெங்கும் நித்தியமாகத் துதிக்க அழைப்பு 1–3

1
அல்லேலூயா, யெகோவாவின் பணியாட்களே, துதியுங்கள்; யெகோவாவினுடைய பெயரைத் துதியுங்கள்.
2
யெகோவாவின் பெயர் இப்பொழுதும், எப்பொழுதும் துதிக்கப்படட்டும்.
3
சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து அது மறையும் இடம்வரை யெகோவாவினுடைய பெயர் துதிக்கப்படட்டும்.

தேவனுடைய இணையற்ற மகிமையும் மேன்மையும் 4–6

4
யெகோவா எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலாக இருக்கிறது.
5
நம்முடைய இறைவனாகிய யெகோவாவைப்போல் யாருண்டு? உன்னதத்தின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற அவரைப்போல் யார் உண்டு?
6
வானங்களையும் பூமியையும் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிற அவரைப்போல் யாருண்டு?

ஏழைகள்மீது தேவனுடைய தாழ்மையான அக்கறை 7–9

7
அவர் ஏழைகளைத் தூசியிலிருந்து உயர்த்துகிறார், எளியவர்களைச் சாம்பற் குவியலில் இருந்து தூக்கிவிடுகிறார்.
8
அவர் தமது மக்களைப் பிரபுக்களோடு அமரப்பண்ணுகிறார்.
9
அவர் பிள்ளைப்பேறற்ற பெண்ணை பிள்ளைகளைப் பெறும் மகிழ்ச்சியுள்ள தாயாக்கி, அவளுடைய வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். அல்லேலூயா.

வேதாகம உரை: Biblica® Open Indian Tamil Contemporary Version™, © 2005, 2020, 2022 Biblica, Inc. · CC BY-SA 4.0“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc., used with permission.