Skip to content
நெகேமியா 11:4-9

நெகேமியா 11:4-9

4
ஆனால் யூதாவையும், பென்யமீனையும் சேர்ந்த மற்ற மக்களில் சிலர் எருசலேமில் வாழ்ந்தார்கள். எருசலேமில் குடியமர்ந்த யூதாவின் வழிவந்த தலைவர்கள் யாரெனில், அத்தாயா உசியாவின் மகன், உசியா சகரியாவின் மகன், சகரியா அமரியாவின் மகன், அமரியா செபதியாவின் மகன், செபதியா மகலாலெயேலின் மகன், மகலாலேல் பேரேஸின் சந்ததிகளுள் ஒருவன்.
5
அடுத்து மாசெயா பாரூக்கின் மகன், பாரூக் கொல்லோசேயின் மகன், கொல்லோசே அசாயாவின் மகன், அசாயா அதாயாவின் மகன், அதாயா யோயாரிபின் மகன், யோயாரிபு சகரியாவின் மகன், சகரியா சீலோனின் வழித்தோன்றலில் ஒருவன்.
6
எருசலேமில் வாழ்ந்த பேரேஸின் சந்ததிகள் யாவரும் மொத்தமாக நானூற்று அறுபத்தெட்டு பலசாலிகளாயிருந்தனர்.
7
பென்யமீன் வழித்தோன்றலில் வந்த தலைவர்கள்: சல்லு மெசுல்லாமின் மகன், மெசுல்லாம் யோயேதின் மகன், யோயேது பெதாயாவின் மகன், பெதாயா கோலாயாவின் மகன், கோலாயா மாசெயாவின் மகன், மாசெயா இதியேலின் மகன், இதியேல் எஷாயாவின் மகன்,
8
அவனைப் பின்பற்றியவர்களான கப்பாய், சல்லாய் என்போருடன் மொத்தம் தொளாயிரத்து இருபத்தெட்டுப்பேர்.
9
சிக்ரியின் மகனான யோயேல் அவர்களின் தலைமை அதிகாரியாய் இருந்தான். அசெனுவாவின் மகன் யூதா பட்டணத்தின் இரண்டாவது மாவட்டத்திற்குப் பொறுப்பாயிருந்தான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options