யோபு 24:18-24
18
“அவர்கள் தண்ணீரின் மேலுள்ள நுரையாயிருக்கிறார்கள்; நாட்டில் அவர்களின் பங்கு சபிக்கப்பட்டிருப்பதினால், அவர்களுடைய திராட்சைத் தோட்டத்திற்கு ஒருவரும் போவதில்லை.
19
வெப்பமும் வறட்சியும் உருகிய உறைபனியை பறித்துக்கொள்வதுபோல, பாதாளமும் பாவிகளை பறித்துக்கொள்ளும்.
20
அவர்களைப் பெற்றெடுத்த கர்ப்பம் அவர்களை மறந்துவிடும், புழுக்கள் அவர்களை விருந்தாக உண்ணும். தீய மனிதர் இனி ஒருபோதும் நினைக்கப்படுவதில்லை, மரத்தைப்போல் அவர்கள் முறிக்கப்படுகிறார்கள்.
21
அவர்கள் பிள்ளையில்லாத மலடியின் சொத்தைப் பட்சிக்கிறார்கள், விதவைக்கும் இரக்கம் காட்டுவதில்லை.
22
இறைவன் தன் வல்லமையினால் வலிமையானோரை வீழ்த்துகிறார்; அவர்கள் நிலைபெற்றிருந்தாலும், வாழ்வின் நிச்சயம் அவர்களுக்கு இல்லை.
23
இறைவன் அவர்களைப் பாதுகாப்புணர்வுடன் இருக்கவிட்ட போதிலும், அவருடைய கண்களோ அவர்களைப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றன.
24
சிறிது காலத்திற்கு உயர்த்தப்படுகிறார்கள், பின்பு இல்லாமல் போகிறார்கள். அவர்கள் தாழ்த்தப்பட்டு, மற்றவர்களைப் போல சேர்க்கப்படுகிறார்கள்; தானியக்கதிர்கள் வெட்டப்படுவதுபோல் வெட்டப்படுகிறார்கள்.
Settings