யோபு 23:3-9
3
அவரை எங்கே கண்டுகொள்ளலாம் என்று மாத்திரம் எனக்குத் தெரிந்தாலோ, அவரின் உறைவிடத்திற்கு என்னால் போகக் கூடுமானாலோ,
4
நான் என் வழக்கை அவர் முன்னால் வைப்பேன்; என் வாயை விவாதங்களால் நிரப்புவேன்.
5
அவர் எனக்கு என்ன பதில் சொல்வார் என்பதை அறிந்து, அவர் சொல்வதை யோசித்துப் பார்ப்பேன்.
6
அவர் தமது மிகுந்த வல்லமையினால் என்னை எதிர்ப்பாரோ? இல்லை, அவர் எனக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவரமாட்டார்.
7
நேர்மையானவன் அவருக்குமுன் தன் வழக்கைக் கொண்டுவரலாம்; நானும் என் நீதிபதியிடமிருந்து என்றென்றும் விடுதலை பெறுவேன்.
8
“ஆனால் நான் கிழக்கேபோனால் அங்கே அவர் இல்லை; மேற்கே போனாலும் நான் அவரைக் காணவில்லை.
9
அவர் வடக்கிலே வேலையாயிருக்கும்போதும் நான் அவரைக் காணவில்லை; அவர் தெற்கே திரும்பும்போதும் ஒரு நொடிப்பொழுதுகூட நான் அவரைக் காணவில்லை.
Settings