உள்ளடக்கத்திற்குச் செல்க
ஏசாயா 26:19-21

உயிர்த்தெழுதலும் இறுதித் தீர்ப்பும் குறித்த நம்பிக்கை

ஏசாயா 26:19-21
19
ஆனாலும் மரித்த உமது மக்கள் உயிர்வாழ்வார்கள்; அவர்களின் உடல்கள் உயிர்த்தெழும்பும். புழுதியில் வாழ்பவர்களே, எழுந்து மகிழ்ந்து சத்தமிடுங்கள். உமது பனி காலைப் பனிபோல் இருக்கிறது; பூமி தனது மரித்தோரைப் பெற்றெடுக்கும்.
20
என் மக்களே, நீங்கள் உங்கள் அறைகளுக்குள் போய், கதவுகளை மூடுங்கள். அவருடைய கோபம் கடந்துபோகும்வரை, சற்று நேரம் உங்களை மறைத்துக்கொள்ளுங்கள்.
21
இதோ, பூமியின் குடிகளை அவர்களுடைய பாவங்களுக்காகத் தண்டிப்பதற்கு, யெகோவா தனது உறைவிடத்தில் இருந்து வருகிறார். பூமி தன்மேல் சிந்தப்பட்ட இரத்தத்தை வெளிப்படுத்தும்; அது தன்மேல் கொலைசெய்யப்பட்டவர்களை இனிமேல் மறைக்கப் போவதில்லை.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options