ஆமோஸ் 4:6-10
6
“ஆனால் நான் உங்கள் நகரங்கள் ஒவ்வொன்றிலும் பட்டினியையும், பட்டணங்கள் ஒவ்வொன்றிலும் உணவுப் பற்றாக்குறையையும் கொண்டுவந்தேன். அப்படியிருந்தும், நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார்.
7
“அறுவடைக்கு இன்னும் மூன்று மாதம் இருக்கையில் நான் வேண்டிய மழையை அனுப்பாமல் விட்டேன். நான் ஒரு நகரத்துக்கு மழையை அனுப்பி, இன்னொரு நகரத்திற்கு அதை அனுப்பாமல் விட்டேன். ஒரு வயலுக்கு மழை பெய்தது. இன்னொன்றோ மழையின்றிக் காய்ந்தது.
8
மக்கள் ஊரூராகத் தண்ணீர் தேடி அலைந்து திரிந்தும், குடிப்பதற்குப் போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார்.
9
“பலமுறை உங்கள் தோட்டங்களையும், திராட்சைத் தோட்டங்களையும் தாக்கினேன். நான் அவற்றைக் கருகல் நோயினாலும், பூஞ்சணத்தினாலும் தாக்கினேன். உங்கள் அத்திமரங்களையும், ஒலிவ மரங்களையும் வெட்டுக்கிளிகள் தின்று முடித்தன. அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார்.
10
“நான் எகிப்தில் செய்ததுபோல, உங்கள் மத்தியில் கொள்ளைநோயை அனுப்பினேன். உங்கள் வாலிபரை வாளினால் கொன்றேன். அவர்களுடன் கைப்பற்றப்பட்ட உங்கள் குதிரைகளையும் கொன்றேன்; கூடாரங்களின் துர்நாற்றத்தினால் உங்கள் நாசிகளை நிரப்பினேன். அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார்.
வேதாகம உரை: Biblica® Open Indian Tamil Contemporary Version™, © 2005, 2020, 2022 Biblica, Inc. · CC BY-SA 4.0“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc., used with permission.
Settings