Skip to content
2 சாமுயேல் 14:20

2 சாமுயேல் 14:20

சுற்றியுள்ள சூழலுடன் வசனம் 20 காட்டப்படுகிறது.
17
“ ‘நன்மையையும் தீமையையும் பிரித்தறிவதில் இப்பொழுதும் என் தலைவனாகிய அரசன் இறைவனின் தூதனைப்போல் இருக்கிறீர்; அதனால் என் தலைவனாகிய அரசன் சொன்னவை உமது அடியாளாகிய எனக்கு மன ஆறுதலைக் கொடுக்கட்டும். உமது இறைவனாகிய யெகோவா உம்மோடுகூட இருப்பாராக’ ” என்றாள்.
18
அப்பொழுது அரசன் அப்பெண்ணிடம், “நான் உன்னிடம் கேட்கப்போவதற்கு நீ எனக்கு ஒன்றும் மறைக்காமல் பதில் சொல்லவேண்டும்” என்றான். அதற்கு அப்பெண், “என் தலைவனாகிய அரசே கேளும்” என்றாள்.
19
அப்பொழுது அரசன் அவளிடம், “இதையெல்லாம் செய்வித்தது யோவாப் அல்லவா?” என்று கேட்டான். அதற்கு அப்பெண், “என் தலைவனாகிய அரசன் வாழ்வது நிச்சயம்போல, என் தலைவனாகிய அரசன் சொன்னவற்றிலிருந்து வலதுபுறமோ, இடதுபுறமோ திரும்ப முடியாதென்பதும் நிச்சயம். உமது பணியாள் யோவாபே இப்படிச் செய்யும்படி எனக்கு அறிவுறுத்தினான். நான் சொன்னவற்றையெல்லாம் அவனே உமது அடியாளுக்குச் சொல்லிக் கொடுத்தான்.
20
உமது நிலைமையை மாற்றுவதற்காகவே உமது பணியாள் யோவாப் இவ்வாறு செய்தான். என் தலைவர் இறைவனின் தூதனைப்போல் ஞானமுடையவர். ஆகையால் நாட்டில் நடப்பவற்றையெல்லாம் அறிந்திருக்கிறீர்” என்றாள்.
21
அப்பொழுது அரசன் யோவாபை அழைத்து, “நான் அதைச் செய்வேன். நீ போய் வாலிபனான அப்சலோமை அழைத்து வா” என்றான்.
22
உடனே யோவாப் அரசனுக்கு முன் முகங்குப்புற விழுந்து, அவனைக் கனப்படுத்தும்படி அவனை வணங்கி வாழ்த்தினான். “என் தலைவனாகிய அரசே, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்திருக்கிறது என இன்று உமது அடியவன் அறிந்தேன். ஏனெனில் தன் அடியவனுடைய வேண்டுகோளை அரசன் நிறைவேற்றினார்” என்றான்.
23
பின்பு யோவாப் கேசூருக்குப்போய் அப்சலோமை எருசலேமுக்கு அழைத்து வந்தான்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options