Skip to content
2 நாளாகமம் 29:20-28

2 நாளாகமம் 29:20-28

20
அடுத்தநாள் அதிகாலையில் எசேக்கியா அரசன் பட்டணத்தின் அதிகாரிகள் எல்லோரையும் ஒன்றுசேர்த்துக்கொண்டு யெகோவாவினுடைய ஆலயத்திற்குப் போனான்.
21
அவர்கள் அரசிற்காகவும், பரிசுத்த இடத்திற்காகவும், யூதாவுக்காகவும் பாவநிவாரண காணிக்கையாக ஏழு காளைகளையும், ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஏழு வெள்ளாட்டுக் கடாக்களையும் கொண்டுவந்தார்கள். அரசன் ஆசாரியர்களான ஆரோனின் சந்ததிகளிடம், “யெகோவாவின் பலிபீடத்தில் இதைப் பலியிடுங்கள்” எனக் கட்டளையிட்டான்.
22
எனவே அவர்கள் காளைகளை வெட்டினார்கள். ஆசாரியர்கள் இரத்தத்தை எடுத்து பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள். அடுத்ததாக அவர்கள் செம்மறியாட்டுக் கடாக்களை வெட்டி அதன் இரத்தத்தை பலிபீடத்தில் தெளித்தார்கள். அதன்பின் செம்மறியாட்டுக் குட்டிகளை வெட்டி, அதன் இரத்தத்தையும் பலிபீடத்தில் தெளித்தனர்.
23
அதன்பின் பாவநிவாரண காணிக்கைக்கான வெள்ளாடுகள் அரசனுக்கும், கூடியிருந்தவர்களுக்கும் முன்பாக கொண்டுவரப்பட்டன. அவர்கள் அவற்றின்மேல் தங்கள் கைகளை வைத்தனர்.
24
இஸ்ரயேல் முழுவதற்கும் பாவநிவர்த்தி செய்வதற்காக ஆசாரியர்கள் வெள்ளாடுகளை வெட்டி, அதன் இரத்தத்தைப் பாவநிவாரண காணிக்கையாக பலிபீடத்தில் படைத்தார்கள். ஏனெனில் அரசன் எல்லா இஸ்ரயேலுக்குமாக தகன காணிக்கைகளையும், பாவநிவாரண காணிக்கைகளையும் செலுத்தும்படி கட்டளையிட்டிருந்தான்.
25
தாவீது, அரசனின் தரிசனக்காரனான காத், இறைவாக்கினன் நாத்தான் ஆகியவர்கள் கற்பித்தவிதமாகவே, அரசன் லேவியர்களை கைத்தாளம், யாழ், வீணை ஆகியவற்றுடன் யெகோவாவின் ஆலயத்தில் நிறுத்தினான்; இது யெகோவாவினால் அவரது இறைவாக்கினர்கள் மூலமாய்க் கட்டளையிடப்பட்டிருந்தது.
26
எனவே லேவியர்கள் தாவீதின் வாத்தியக் கருவிகளுடனும், ஆசாரியர்கள் தங்கள் எக்காளங்களுடனும் ஆயத்தமாக நின்றனர்.
27
எசேக்கியா பலிபீடத்தின்மேல் தகன காணிக்கைகளைப் பலியிடும்படி கொடுத்தான். காணிக்கை செலுத்தத் தொடங்கியவுடனே, எக்காளங்களுடனும் இஸ்ரயேலின் அரசன் தாவீதின் இசைக் கருவிகளுடனும் யெகோவாவுக்கான துதிபாடல்களும் ஆரம்பித்தன.
28
தகன காணிக்கை செலுத்துமட்டும் பாடகர் பாட, எக்காளம் முழங்க, சபையோர் எல்லோரும் தலைகுனிந்து வழிபட்டார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options