உள்ளடக்கத்திற்குச் செல்க

The Feasts of Trumpets பற்றிய பைபிள் வசனங்கள்

5 வசனங்கள் · 4 அம்சங்கள்

"The Feasts of Trumpets" என்பதைத் தேடு

முக்கிய பைபிள் வசனங்கள்

  1. அன்றைய நாளில் ஒரு இளங்காளையையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும், ஒரு வயதுடைய ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமான தகன காணிக்கையாகச் செலுத்தவேண்டும். இந்த மிருகங்கள் யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.

  2. காளையுடன், பத்தில் மூன்று எப்பா அளவு சிறந்த மாவுடன் எண்ணெய்விட்டுப் பிசைந்து தானிய காணிக்கையைச் செலுத்தவேண்டும். செம்மறியாட்டுக் கடாவுடனும் பத்தில் இரண்டு எப்பா அளவான மாவை அவ்விதம் செலுத்தவேண்டும்.

  3. அவ்விதமே ஏழு செம்மறியாட்டுக் குட்டிகள் ஒவ்வொன்றுடனும் பத்திலொரு எப்பா அளவான சிறந்த மாவைச் செலுத்தவேண்டும்.

  4. உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்கு பாவநிவாரண காணிக்கையாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

  5. இவை குறிப்பிடப்பட்ட மாதாந்திர தகன காணிக்கையுடனும், அன்றாட தகன காணிக்கையுடனும், அவற்றிற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் இவைகளையும் செலுத்தப்பட வேண்டும். இவை மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் காணிக்கைகளாகும்.