உள்ளடக்கத்திற்குச் செல்க

Sacred Anointing பற்றிய பைபிள் வசனங்கள்

6 வசனங்கள் · 18 அம்சங்கள்

"Sacred Anointing" என்பதைத் தேடு

முக்கிய பைபிள் வசனங்கள்

  1. “நீ பின்வரும் சிறந்த வாசனைப் பொருட்களை எடுக்கவேண்டும். திரவ வெள்ளைப்போளம் 500 சேக்கல், சுகந்த கறுவாப்பட்டை 250 சேக்கல், நறுமண வசம்பு 250 சேக்கல்,

  2. இலவங்கப்பட்டை 500 சேக்கல் ஆகிய இவையெல்லாம் பரிசுத்த இடத்தின் சேக்கல் அளவின்படி இருக்கவேண்டும். அத்துடன் ஒரு ஹின் அளவு ஒலிவ எண்ணெயையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

  3. இவற்றைக்கொண்டு வாசனை தைலம் தயாரிப்பவன் செய்வதுபோல், வாசனைக் கலவையாக பரிசுத்த அபிஷேக எண்ணெயைச் செய்யவேண்டும். இது பரிசுத்த அபிஷேக எண்ணெயாயிருக்கும்.

  4. ஆரோனுக்குப் பரிசுத்த உடைகளை உடுத்தி, அவன் ஆசாரியராக எனக்குப் பணிசெய்வதற்கு அவனை அபிஷேகம்பண்ணி, அர்ப்பணம் செய்யவேண்டும்.

  5. அவனுடைய மகன்களையும் அழைத்துவந்து, அவர்களுக்கு உள் அங்கிகளை உடுத்து.

  6. அவர்கள் எனக்கு ஆசாரியப் பணிசெய்யும்படி, அவர்களுடைய தகப்பனை அபிஷேகம் செய்ததுபோலவே அவர்களையும் அபிஷேகம் செய்யவேண்டும். அவர்கள் பெற்ற இந்த, ‘அபிஷேகம்’ தலைமுறைதோறும் நீடித்திருக்கும் ஆசாரியத்துவத்திற்கான அபிஷேகமாய் இருக்கும்.”