உள்ளடக்கத்திற்குச் செல்க

Naashon பற்றிய பைபிள் வசனங்கள்: A captain of Judah's host

6 வசனங்கள் · 2 அம்சங்கள்

A captain of Judah's host பற்றிய வசனங்கள்

  1. அம்மினதாபின் மகளும், நகசோனின் சகோதரியுமான எலிசபாளை ஆரோன் திருமணம் செய்தான்; அவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலெயாசாரையும், இத்தாமாரையும் பெற்றாள்.

  2. யூதா கோத்திரத்திலிருந்து அம்மினதாபின் மகன் நகசோன்,

  3. சூரிய உதயத்தை நோக்கிய கிழக்குப் பக்கத்தில், யூதாவின் முகாம் பிரிவுகள் தங்கள் சின்னத்தின்கீழ் முகாமிடவேண்டும். அம்மினதாபின் மகன் நகசோன், யூதா மக்களின் தலைவன்.

  4. முதலாம் நாள், யூதா கோத்திரத்தைச் சேர்ந்த அம்மினதாபின் மகன் நகசோன் தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.

  5. சமாதான காணிக்கையாகப் பலியிடுவதற்கு இரண்டு எருதுகளும், ஐந்து செம்மறியாட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும் ஐந்து ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளும் இருந்தன. அம்மினதாபின் மகன் நகசோனின் காணிக்கை இதுவே.

  6. முதலாவதாக, யூதாவின் முகாம் பிரிவுகள் தங்கள் கொடியின்கீழ் சென்றன. அம்மினதாபின் மகன் நகசோன் அவர்களுக்குத் தலைமை தாங்கினான்.