உள்ளடக்கத்திற்குச் செல்க

Feast of Trumpets பற்றிய பைபிள் வசனங்கள்

13 வசனங்கள் · 2 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

  1. “நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஏழாம் மாதத்தின் முதலாம் நாள் உங்களுக்கு ஒரு ஓய்வுநாளாயிருக்க வேண்டும். அந்த நாள் எக்காளம் முழங்கி, நினைவு விழாவாகக் கொண்டாடப்படும் ஒரு பரிசுத்த சபைக்கூடுதலாக இருக்கவேண்டும்.

  2. அந்த நாளில் வழக்கமாகச் செய்யும் வேலைகளைச் செய்யாமல் யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையை கொண்டுவர வேண்டும்’ ” என்றார்.

  3. “ ‘ஏழாம் மாதம் முதலாம்தேதி பரிசுத்த சபையைக் கூட்டுங்கள். அந்நாளில் வழக்கமான வேலை எதையும் செய்யவேண்டாம். அது உங்களுக்கு எக்காளங்களை ஊதும் நாளாயிருக்கிறது.

  4. அன்றைய நாளில் ஒரு இளங்காளையையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும், ஒரு வயதுடைய ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமான தகன காணிக்கையாகச் செலுத்தவேண்டும். இந்த மிருகங்கள் யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.

  5. காளையுடன், பத்தில் மூன்று எப்பா அளவு சிறந்த மாவுடன் எண்ணெய்விட்டுப் பிசைந்து தானிய காணிக்கையைச் செலுத்தவேண்டும். செம்மறியாட்டுக் கடாவுடனும் பத்தில் இரண்டு எப்பா அளவான மாவை அவ்விதம் செலுத்தவேண்டும்.

  6. அவ்விதமே ஏழு செம்மறியாட்டுக் குட்டிகள் ஒவ்வொன்றுடனும் பத்திலொரு எப்பா அளவான சிறந்த மாவைச் செலுத்தவேண்டும்.

  7. உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்கு பாவநிவாரண காணிக்கையாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

  8. இவை குறிப்பிடப்பட்ட மாதாந்திர தகன காணிக்கையுடனும், அன்றாட தகன காணிக்கையுடனும், அவற்றிற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் இவைகளையும் செலுத்தப்பட வேண்டும். இவை மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் காணிக்கைகளாகும்.

  9. எனவே ஏழாம் மாதம் முதலாம் நாளில், ஆண்களும் பெண்களும் விளங்கிக்கொள்ளக்கூடிய எல்லோரும் கூடியிருந்த சபைக்குமுன் மோசேயின் சட்ட புத்தகத்தை ஆசாரியன் எஸ்றா கொண்டுவந்தான்.

  10. எல்லா மனிதரும் இறைவனுடைய சட்டத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதார்கள். அதனால் ஆளுநரான நெகேமியாவும், ஆசாரியனும், சட்ட ஆசிரியருமான எஸ்றாவும், மக்களுக்குக் போதித்துக்கொண்டிருந்த லேவியர்களும் எல்லா மக்களிடமும், “இந்த நாள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான நாள். ஆகவே நீங்கள் துக்கப்படவோ, அழவோ வேண்டாம்” என்றார்கள்.

  11. நெகேமியா அவர்களிடம், “நீங்கள் சிறந்த உணவைச் சாப்பிட்டு, இனிய இரசத்தைக் குடித்து மகிழ்ந்திருங்கள். தங்களுக்கென்று ஒன்றும் இல்லாமல் இருப்பவர்களுக்கும், அவற்றில் கொஞ்சத்தை அனுப்புங்கள். ஏனென்றால் இந்த நாள் நம்முடைய யெகோவாவுக்குப் பரிசுத்தமான நாள். நீங்கள் துக்கப்படவேண்டாம், யெகோவா கொடுக்கும் மகிழ்ச்சியே உங்கள் பெலன்” என்றான்.

  12. அப்படியே லேவியரும், “அமைதியாயிருங்கள், இந்நாள் பரிசுத்தமானது. துக்கமாயிருக்க வேண்டாம்” என்று சொல்லி எல்லா மக்களையும் ஆறுதல்படுத்தினார்கள்.

  13. அதன்பின்பு எல்லா மக்களும் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட வார்த்தைகளை நன்கு விளங்கிக்கொண்டபடியினால், தாங்கள் சாப்பிட்டுக் குடிப்பதற்கும், தேவைப்பட்டவர்களுக்கு உணவுப் பங்குகளை அனுப்புவதற்கும், சந்தோஷத்துடன் கொண்டாடுவதற்கும் போனார்கள்.