Courts of Justice பற்றிய பைபிள் வசனங்கள்: Judges of, appointed by the governor
Judges of, appointed by the governor பற்றிய வசனங்கள்
அந்நாட்களில் நான் உங்களுக்குச் சொல்லியிருந்ததாவது, “நான் உங்களைத் தனியே சுமக்க முடியாதபடி நீங்கள் அதிக பாரமாயிருக்கிறீர்கள்.
உங்கள் இறைவனாகிய யெகோவா, இன்று நீங்கள் வானத்து நட்சத்திரங்களைப்போல் அநேகராயிருக்கும்படி, எண்ணிக்கையில் உங்களை அதிகரிக்கச் செய்தார்.
உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா, உங்களை இன்னும் ஆயிரம் மடங்காகப் பெருகப்பண்ணி, தாம் வாக்களித்தபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக!
ஆனால் உங்களுடைய பிரச்சனைகளையும், தாங்கமுடியாத தொல்லைகளையும், உங்கள் வாக்குவாதங்களையும் நான் தனியே சுமப்பது எப்படி?
ஆகவே நீங்கள் உங்கள் கோத்திரங்கள் ஒவ்வொன்றிலுமிருந்து ஞானமும், விளங்கிக்கொள்ளும் ஆற்றலும், மதிப்பும் பெற்றவர்களான சில மனிதரைத் தேர்ந்தெடுங்கள். அவர்களை உங்கள் தலைவர்களாக நான் நியமிப்பேன்” என்றேன்.
அப்பொழுது நீங்கள், “நீர் முன்வைத்த யோசனை நல்லது” என்று பதிலளித்தீர்கள்.
எனவே நான் உங்கள் கோத்திரங்களில் ஞானமும் நற்பெயரும் கொண்ட மனிதரை உங்கள்மேல் தலைவர்களாய் இருக்கும்படி நியமித்தேன். அவர்களை உங்கள் ஆயிரம்பேருக்கும், நூறுபேருக்கும், ஐம்பதுபேருக்கும், பத்துபேருக்கும் தளபதிகளாகவும், கோத்திரங்களுக்கு அதிகாரிகளாகவும் நியமித்தேன்.