உள்ளடக்கத்திற்குச் செல்க

Tilgathpilneser

6 வசனங்கள்

இவ்வாறும் அறியப்படுகிறார்: Pul, Jareb, Tilgath-pilneser

Tilgathpilneser பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. இவனுடைய காலத்தில் அசீரிய நாட்டின் அரசனான பூல் இஸ்ரயேல் நாட்டுக்குப் படையெடுத்து வந்தான். மெனாகேம் அவனுடைய ஆதரவை பெறுவதற்காகவும், ஆட்சியில் தனது அதிகாரத்தைப் பெலப்படுத்துவதற்காகவும் அவனுக்கு ஆயிரம் தாலந்து நிறையுள்ள வெள்ளியைக் கொடுத்தான்.

  2. பாகாலின் மகன் பேரா; பேரா ரூபனியரின் தலைவன். இவனை அசீரியாவின் அரசனான தில்காத்பில்நேசர் சிறைப்பிடித்துப் போனான்.

  3. எனவே இஸ்ரயேலின் இறைவன், தில்காத்பில்நேசர் என அழைக்கப்படும் அசீரிய அரசனான பூலின் ஆவியைத் தூண்டிவிட்டார். அவன் ரூபனியர், காத்தியர், மனாசேயின் பாதிக்கோத்திரத்தினர் ஆகியோரை நாடுகடத்தினான். அவன் அவர்களை ஆலா, ஆபோர், ஆரா, கோசான் நதிக்கரை ஆகிய இடங்களுக்குக் கொண்டுசென்றான். அவர்கள் இன்னும் அங்கேயே வாழ்கின்றனர்.

  4. அசீரிய அரசன் தில்காத்பில்நேசர் அவனிடம் வந்தான். அவன் உதவிசெய்யாமல் தொல்லையைக் கொடுத்தான்.

  5. “எப்பிராயீம் தன் வியாதியையும், யூதா தன் புண்களையும் கண்டபோது, எப்பிராயீம் அசீரியாவின் பக்கம் திரும்பி, அதன் பெரிய அரசனிடம் உதவி கேட்டனுப்பினான். ஆனால் உனக்கு சுகமாக்கவும், உனது புண்களை ஆற்றவும் அவனால் முடியாது.

  6. அது அசீரியாவின் பேரரசனுக்குக் கப்பமாக அங்கு கொண்டுபோகப்படும். அதைக்குறித்து எப்பிராயீம் அவமானமடையும். இஸ்ரயேல் தன் சொந்த ஆலோசனையினால் வெட்கமடையும்.