உள்ளடக்கத்திற்குச் செல்க

Obadiah

6 வசனங்கள்

Obadiah பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. ஆகாப் அரண்மனைக்குப் பொறுப்பாயிருந்த ஒபதியாவை வரும்படி கட்டளை கொடுத்தான். ஒபதியா யெகோவாவிடம் மிகவும் பயபக்தி உள்ளவனாயிருந்தான்.

  2. யேசபேல் யெகோவாவின் இறைவாக்கினர்களைக் கொலைசெய்தபோது ஒபதியா நூறு இறைவாக்கு உரைப்பவர்களை அழைத்து இரண்டு குகைகளில் ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, உணவும் தண்ணீரும் கொடுத்துப் பாதுகாத்தான்.

  3. ஆகாப் ஒபதியாவைப் பார்த்து, “நீ நாடு முழுவதும்போய், பள்ளத்தாக்குகளையும், நீரூற்றுகளையும் பார். ஒருவேளை எங்கள் குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் உயிரோடு பாதுகாப்பதற்கு தேவையான புல்லை காணலாம். இதனால் நாம் எங்கள் மிருகங்கள் எதையும் கொல்லவேண்டியது ஏற்படாது” என்றான்.

  4. எனவே அவர்கள் பார்க்கவேண்டிய நாட்டை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து, ஒரு பக்கமாக ஆகாபும், மற்றப் பக்கமாக ஒபதியாவும் போனார்கள்.

  5. ஒபதியா தன் வழியாக நடந்து போய்க்கொண்டிருந்தபோது எலியா அவனைச் சந்தித்தான். ஒபதியா அவனை இன்னாரென அறிந்து, அவனுக்கு முன்னால் முகங்குப்புற விழுந்து, “உண்மையிலே நீர் என் தலைவனாகிய எலியாதானா” என்றான்.

  6. அப்பொழுது ஒபதியா ஆகாபுக்குச் செய்தியைச் சொல்வதற்காகப்போனான். ஆகாப் அதைக்கேட்டு எலியாவைச் சந்திக்கப் போனான்.