சங்கீதம் 98:4-9
4
பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் யெகோவாவை மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டு களிப்புடன் இசையோடு பாடுங்கள்.
5
யாழோடு யெகோவாவுக்கு இசை பாடுங்கள்; யாழோடும், கீதசத்தத்தோடும்,
6
எக்காளங்களோடும், கொம்பு வாத்திய முழக்கங்களோடும் யெகோவாவாகிய அரசரின்முன் மகிழ்ந்து பாடுங்கள்.
7
கடலும் அதிலுள்ள அனைத்தும், உலகமும் அதிலுள்ள அனைவரும் ஆர்ப்பரிப்பார்களாக.
8
ஆறுகள் தங்கள் கைகளைத் தட்டட்டும்; மலைகள் மகிழ்ச்சியுடன் ஒன்றுசேர்ந்து பாடட்டும்.
9
அவை யெகோவாவுக்கு முன்பாகப் பாடட்டும்; ஏனெனில், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் உலகத்தை நீதியுடனும், நாடுகளை நேர்மையுடனும் நியாயந்தீர்ப்பார்.
Settings