சங்கீதம் 76:6-10
6
யாக்கோபின் இறைவனே, உமது கோபத்தில் குதிரை, தேர் இரண்டுமே செயலிழந்து கிடக்கின்றன.
7
நீரே, நீர் ஒருவருரே பயப்படத்தக்கவர்; நீர் கோபமாய் இருக்கும்போது உம்முன் யாரால் நிற்கமுடியும்?
8
நீர் வானத்திலிருந்து நியாயத்தீர்ப்பை வழங்கினீர்; பூமி பயந்து அமைதியாய் இருந்தது.
9
இறைவனே, நாட்டில் துன்புற்ற யாவரையும் காப்பாற்றுவதற்காக நீர் எழுந்தபோதே, அந்த நியாயத்தீர்ப்பை வழங்கினீர்.
10
நிச்சயமாகவே, மனிதருக்கு விரோதமான உமது கோபம் உமக்குத் துதியைக் கொண்டுவருகிறது; உமது கடுங்கோபத்திற்குத் தப்பி மீந்தவர்களை நீர் அடக்குவீர்.
Settings