சங்கீதம் 40:12-15
12
ஏனெனில் எண்ணற்ற இன்னல்கள் என்னைச் சூழ்கின்றன; என் பாவங்கள் என்னை மூடிக்கொண்டதால், நான் பார்க்க முடியாதிருக்கிறேன். என் தலையிலுள்ள முடியைப் பார்க்கிலும், அவைகள் அதிகமானவை; அதினால் என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.
13
யெகோவாவே, தயவுசெய்து என்னைக் காப்பாற்றும்; யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும்.
14
என் உயிரை அழிக்கத் தேடுகிற யாவரும் வெட்கப்பட்டுக் குழப்பமடைவார்களாக; எனது அழிவை விரும்புகிற யாவரும் அவமானமடைந்து திரும்புவார்களாக.
15
என்னைப் பார்த்து, “ஆ! ஆ!” என்று ஏளனம் செய்கிறவர்கள் அவர்களுடைய வெட்கத்தினால் நிலைகுலைந்து போவார்களாக.
Settings