Skip to content
சங்கீதம் 31:1-8

சங்கீதம் 31:1-8

1
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைந்திருக்கிறேன்; என்னை ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.
2
உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னைத் தப்புவிக்க விரைவாய் வாரும்; என் புகலிடமான கன்மலையாகவும், என்னைக் காப்பாற்றும் பலமான கோட்டையாகவும் இரும்.
3
நீர் என் கன்மலையும் என் கோட்டையுமாயிருப்பதால், உமது பெயரின் நிமித்தம் எனக்கு வழிகாட்டி என்னை வழிநடத்தும்.
4
நீரே என் புகலிடம், ஆகையால் எனக்காக வைக்கப்பட்டிருக்கும் கண்ணியிலிருந்து என்னை விடுவியும்.
5
உமது கைகளில் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன்; யெகோவாவே, என் உண்மையின் இறைவனே, என்னை மீட்டுக்கொள்ளும்.
6
இறைவனல்லாதவைகளைப் பற்றிக்கொள்கிறவர்களை நான் வெறுக்கிறேன்; நான் யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருக்கிறேன்.
7
நான் உமது அன்பில் மகிழ்ந்து களிகூருவேன்; ஏனெனில், நீர் என் வேதனையைக் கண்டு, என் ஆத்தும துயரத்தை அறிந்திருக்கிறீர்.
8
நீர் என்னை என் பகைவனிடத்தில் ஒப்புக்கொடாமல், விசாலமான இடத்தில் என் பாதங்களை நிறுத்தினீர்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options