சங்கீதம் 143:7-12
7
யெகோவாவே, சீக்கிரமாய் எனக்குப் பதில் தாரும்; என் உள்ளம் சோர்ந்துபோகிறது; உமது முகத்தை என்னிடமிருந்து மறையாதேயும்; இல்லாவிட்டால், நான் மரணக் குழியில் இறங்குகிறவர்களைப் போலாகிவிடுவேன்.
8
காலை வேளையானது உமது உடன்படிக்கையின் அன்பின் செய்தியைக் கொண்டுவரட்டும், ஏனெனில் நான் என் நம்பிக்கையை உம்மிலேயே வைத்திருக்கிறேன்; நான் போகவேண்டிய வழியை எனக்குக் காண்பியும், ஏனெனில் என் உயிரை உம்மிடத்தில் ஒப்படைக்கிறேன்.
9
யெகோவாவே, என் பகைவரிடமிருந்து என்னைத் தப்புவியும்; ஏனெனில் நான் உமக்குள் என்னை மறைத்துக்கொள்கிறேன்.
10
நீரே என் இறைவன்; ஆதலால் உமது சித்தத்தைச் செய்ய எனக்குப் போதியும்; உமது நல்ல ஆவியானவர் என்னை நல்வழியில் நடத்துவாராக.
11
யெகோவாவே, உமது பெயரின் மகிமைக்காக என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்; உமது நியாயத்தினிமித்தம் வேதனையிலிருந்து என்னை விடுவியும்.
12
உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் என் பகைவரை அழித்துவிடும்; என் எதிரிகள் அனைவரையும் ஒழித்துவிடும்; ஏனெனில் நான் உமது அடியவன்.
Settings