Skip to content
சங்கீதம் 12:5-8

சங்கீதம் 12:5-8

செயல்படுவதாக ஆண்டவரின் வாக்குறுதி

5
“ஏழைகள் ஒடுக்கப்படுகிறார்கள்; எளியவர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதினால் நான் இப்பொழுது எழுந்து, அவர்களைத் துன்புறுத்துவோரிடமிருந்து காப்பாற்றுவேன்” என்று யெகோவா கூறுகிறார்.
6
யெகோவாவின் வார்த்தைகள் தூய்மையானவை. அவை களிமண் உலையில் ஏழு தரம் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளியைப்போல் இருக்கின்றன.

தெய்வீகக் காப்பில் நம்பிக்கை

7
யெகோவாவே, நீர் ஏழைகளாகிய அவர்களைப் பாதுகாப்பாய் வைத்துக்கொள்வீர்; கொடியவர்களிடமிருந்து எங்களை என்றென்றும் காத்துக்கொள்வீர்.
8
இழிவான செயல்கள் மனிதர் மத்தியில் பாராட்டப்படுவதினால் கொடியவர்கள் வீம்புடன் சுற்றித் திரிகிறார்கள்.

See also

Where else Scripture says this.

  • நீதிமொழிகள் 30:5

    “இறைவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் குறைபாடற்றது; அவரிடத்தில் அடைக்கலம் கொள்பவர்களுக்கு அவர் கேடயமானவர்.
    from verse 6
  • சங்கீதம் 34:6

    இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா செவிகொடுத்து; அவனை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளிலிருந்தும் காப்பாற்றினார்.
    from verse 5
  • சங்கீதம் 18:30

    இறைவனுடைய வழி முழு நிறைவானது: யெகோவாவின் வார்த்தையோ குறைபாடற்றது; அவரிடத்தில் தஞ்சமடைவோர் அனைவருக்கும் அவர் கேடயமாயிருக்கிறார்.
    from verse 6
  • நீதிமொழிகள் 14:31

    ஏழைகளை ஒடுக்குகிறவர்கள் அவர்களைப் படைத்தவரை அவமதிக்கிறார்கள்; ஆனால் ஏழைகளுக்குத் தயவு பண்ணுகிறவர்கள் இறைவனைக் கனம்பண்ணுகிறார்கள்.
    from verse 5
  • 2 சாமுயேல் 22:31

    “இறைவனுடைய வழி முழு நிறைவானது: யெகோவாவின் வார்த்தையோ குறைபாடற்றது; அவரிடத்தில் தஞ்சமடைவோர் அனைவருக்கும் அவர் கேடயமாயிருக்கிறார்.
    from verse 6
  • யாக்கோபு 5:4

    இதோ, உங்கள் வயல்களின் வேலையாட்களுக்கு நீங்கள் கொடுக்கத் தவறிய கூலிப்பணம் உங்களுக்கு எதிராய் கூக்குரலிடுகிறதே! அறுவடை செய்தவர்களின் அழுகைக்குரல், எல்லாம் வல்ல கர்த்தரின் காதுகளுக்கு எட்டியிருக்கிறதே!
    from verse 5
  • ஏசாயா 33:10

    “இப்பொழுது நான் எழும்புவேன், இப்பொழுது நான் உயர்த்தப்படுவேன். இப்பொழுது நான் மேன்மைப்படுத்தப்படுவேன்” என்று யெகோவா சொல்கிறார்.
    from verse 5
  • சங்கீதம் 146:7

    அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியுள்ளவர்களுக்கு உணவு கொடுக்கிறார். யெகோவா கைதிகளை விடுதலையாக்குகிறார்,
    from verse 5
  • சங்கீதம் 146:8

    யெகோவா குருடருக்குப் பார்வை கொடுக்கிறார், யெகோவா தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துகிறார், யெகோவா நீதிமான்களில் அன்பாயிருக்கிறார்.
    from verse 5
  • சங்கீதம் 19:8

    யெகோவாவினுடைய ஒழுங்குவிதிகள் நியாயமானவை, அவை இருதயத்திற்கு மகிழ்வைக் கொடுக்கின்றன. யெகோவாவினுடைய கட்டளைகள் பிரகாசமானவை, அவை கண்களுக்கு வெளிச்சத்தைக் கொடுக்கின்றன.
    from verse 6
  • மீகா 7:8

    எருசலேம் மக்கள் சொல்கிறதாவது: எங்கள் பகைவனே, எங்களை கேலிசெய்து மகிழாதே; நாங்கள் விழுந்தாலும் எழுந்திருப்போம். நாங்கள் இருளில் உட்கார்ந்தாலும் யெகோவா எங்களுக்கு ஒளியாயிருப்பார்.
    from verse 5
  • மீகா 7:9

    நாங்கள் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தபடியால், அவரின் கோபத்தைச் சுமப்போம். அவர் எங்களுக்காக வாதாடி, எங்கள் நியாயத்தை நிலைநிறுத்துவார். அவர் எங்களை வெளியே வெளிச்சத்தின் முன் கொண்டுவருவார். நாங்கள் அவரது நீதியைக் காண்போம்.
    from verse 5
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options