1
அதற்கு யோபு மறுமொழியாக சொன்னது:
2
“பெலவீனமானவனுக்கு நீ எப்படி உதவினாய்? தளர்ந்த கையை நீ எப்படித் தாங்கினாய்?
3
ஞானமில்லாத ஒருவனுக்கு நீ எப்படி புத்திமதி கூறி, சிறந்த மெய்யறிவைக் காட்டியிருக்கிறாய்?
4
இந்த வார்த்தைகளைச் சொல்ல உனக்கு உதவியவர் யார்? யாருடைய ஆவி உன் வாயிலிருந்து பேசிற்று?