யோபு 12:1-6
1
பின்பு யோபு மறுமொழியாக சொன்னது:
2
“நீங்கள் பெரியவர்கள், சந்தேகம் இல்லை. ஞானமும் உங்களுடனே செத்துவிடும்!
3
எனக்கும் உங்களைப்போல் ஒரு மனம் உண்டு; நான் உங்களுக்குக் குறைந்தவனல்ல; இவற்றையெல்லாம் அறியாதவன் யார்?
4
“நான் இறைவனை நோக்கிக் கூப்பிடுவேன், அவர் பதிலளிப்பார்; நான் நீதிமானும், குற்றமற்றவனுமாய் இருந்தபோதிலும், என் நண்பர்களின் சிரிப்பிற்கு ஆளாகிவிட்டேன்.
5
சுகவாழ்வுள்ள மனிதர்கள் அவலத்தை வெறுக்கிறார்கள்; அவர்கள் அது, கால் இடறுகிறவர்களின் விதி என்று எண்ணுகிறார்கள்.
6
திருடர்களுடைய கூடாரங்கள் குழப்பமின்றி இருக்கின்றன; தெய்வத்தைத் தங்கள் கைகளிலேந்திச் செல்கிறவர்களும், இறைவனைக் கோபமூட்டுகிறவர்களும் பாதுகாப்பாயிருக்கிறார்கள்.
Settings