எரேமியா 33:23-26
23
யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது:
24
“ ‘யெகோவா தாம் தெரிந்துகொண்ட இரு அரசுகளையும் நிராகரித்துவிட்டார் என்று இந்த மக்கள் சொல்வதை நீ கவனிக்கவில்லையோ’? ஆகவே அவர்கள் என் மக்களை அவமதித்து, அவர்களை ஒரு நாடாக எண்ணாதிருக்கிறார்கள்.
25
யெகோவா கூறுவது இதுவே: ‘பகலோடும், இரவோடும் நான் பண்ணின உடன்படிக்கையையும், வானத்திற்கும், பூமிக்கும் நான் விதித்த சட்டங்களையும் நான் நிலை நிறுத்தாமல் இருப்பேனானால்,
26
யாக்கோபின் வம்சத்தையும், என் தாசனாகிய தாவீதையும் நான் நிராகரிப்பேன். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் சந்ததிகளை அரசாளுவதற்கு, தாவீதினுடைய மகன்களில் ஒருவனையும் நான் தெரிந்துகொள்ளவும் மாட்டேன். ஆனால் நானோ அவர்களுடைய செல்வங்கள் யாவற்றையும் திரும்பக் கொடுத்து, அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்’ என்கிறார்” என்றான்.
Settings