Skip to content
ஏசாயா 43:8-11

ஏசாயா 43:8-11

8
கண்களிருந்தும் குருடராயும், காதுகளிருந்தும் செவிடராயும் இருப்போரை வெளியே கொண்டுவாருங்கள்.
9
எல்லா நாடுகளும் ஒன்றுகூடுகிறார்கள், சகல மக்களும் சபையாய் கூடுகிறார்கள்; அவர்களுடைய தேவர்களில் இதை முன்னறிவித்தவர் யார்? இந்த பூர்வகாரியங்களை தெரிவித்தவர் யார்? அவர்கள் தாங்கள் சரியென நிரூபிப்பதற்குத் தங்கள் சாட்சிகளைக் கொண்டுவரட்டும்; அப்பொழுது மற்றவர்கள் அதைக்கேட்டு, “அது உண்மை” என்று சொல்லட்டும்.
10
“நீங்களே என் சாட்சிகளாயிருக்கிறீர்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். “நீங்கள், நான் தெரிந்துகொண்ட என் ஊழியராய் இருக்கிறீர்கள். அதனால், நீங்கள் என்னை அறிந்து விசுவாசித்து, நானே அவரென்று விளங்கிக்கொள்ளுவீர்கள். எனக்குமுன் ஒரு தெய்வம் உருவாக்கப்படவும் இல்லை, எனக்குப்பின் எதுவும் இருக்கப்போவதுமில்லை.
11
நான், நானே யெகோவா, என்னைத்தவிர வேறு இரட்சகர் இல்லை.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options