Skip to content
எஸ்றா 2:68-70

ஆரம்பக் காணிக்கைகளும் குடியேற்றமும்

எஸ்றா 2:68-70
68
அவர்கள் எல்லோரும் எருசலேமிலுள்ள யெகோவாவின் ஆலயத்துக்கு வந்து சேர்ந்தவுடனே, குடும்பத் தலைவர்களில் சிலர் இறைவனுடைய ஆலயத்தை அதனுடைய இடத்தில் திரும்பக் கட்டுவதற்காக சுயவிருப்புக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
69
அவர்கள் தங்களால் முடியுமானவரை 61,000 தங்கக் காசுகளையும், 5,000 வெள்ளியையும், ஆசாரியருக்கான 100 உடைகளையும் அவ்வேலைக்கென ஆலயத் திரவிய களஞ்சியத்துக்குக் கொடுத்தார்கள்.
70
ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோர் வேறுசில மக்களுடனும், மீதியான இஸ்ரயேலருடனும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியமர்ந்தார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 90 chars

Options