Skip to content
எசேக்கியேல் 48:30-35

பரிசுத்த நகரத்தின் வாசல்களும் பெயரும்

எசேக்கியேல் 48:30-35
30
“நகரிலிருந்து வெளியேறும் வழிகள் இவையே: “அவை 4,500 முழ நீளமான வடபகுதி தொடங்கி அமைந்திருக்கும்.
31
நகர வாசல்கள் இஸ்ரயேலரின் கோத்திரங்களின்படியே பெயரிடப்படும். வடபுறத்திலுள்ள மூன்று வாசல்களும் ரூபன் வாசல், யூதா வாசல், லேவி வாசல் எனப் பெயரிடப்படும்.
32
நீளம் 4,500 முழமான கிழக்குப்புறத்திலுள்ள மூன்று வாசல்களும் யோசேப்பு வாசல், பென்யமீன் வாசல், தாண் வாசல் எனப் பெயரிடப்படும்.
33
நீளம் 4,500 முழமான தெற்குப் புறத்திலுள்ள மூன்று வாசல்களும் சிமியோன் வாசல், இசக்கார் வாசல், செபுலோன் வாசல் எனப் பெயரிடப்படும்.
34
நீளம் 4,500 முழமான மேற்குப் புறத்திலுள்ள மூன்று வாசல்களும் காத் வாசல், ஆசேர் வாசல், நப்தலி வாசல் எனப் பெயரிடப்படும்.
35
“சுற்றிலும் தூரம் 18,000 முழமாக இருக்கும். “அக்காலம் முதல் நகருக்கு வழங்கப்படும் பெயர், ‘யெகோவா அங்கே இருக்கிறார்’ ” என்பதே.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options