2 கொரிந்தியர் 13:5
சுற்றியுள்ள சூழலுடன் வசனம் 5 காட்டப்படுகிறது.
2
நான் இரண்டாவது முறையாக உங்களிடம் வந்திருந்தபோது, ஏற்கெனவே உங்களை எச்சரித்திருந்தேன். இப்பொழுதும் நான் உங்களோடு இல்லாதிருந்தாலும், மீண்டும் உங்களை எச்சரிக்கிறேன்: நான் மீண்டும் வரும்போது, முன்பு பாவம் செய்தவர்களையும் இப்பொழுது பாவம் செய்கிறவர்களையும் தண்டிக்காமல் விடமாட்டேன்.
3
கிறிஸ்து என் மூலமாய்ப் பேசுகிறார் என்பதற்கு அத்தாட்சியை நீங்கள் கட்டாயப்படுத்திக் கேட்பதினால், நான் இப்படிச் செய்வேன். கிறிஸ்து உங்களிடையே பலம் குறைந்தவராக அல்ல, பலமுள்ளவராகவே செயலாற்றுகிறார்.
4
உண்மையில் அவர் வலுவற்ற மனித உடலில் சிலுவையில் அறையப்பட்டார். ஆனால், இறைவனுடைய வல்லமையினாலேயே அவர் உயிர் வாழ்கிறார். அப்படியே நாங்களும் அவருக்குள் பலவீனர்களாய் இருக்கிறோம். ஆனால் இறைவனுடைய வல்லமையினால் உங்கள்பொருட்டு ஊழியம் செய்ய அவருடன் உயிர்வாழ்வோம்.
5
நீங்கள் விசுவாசத்தில் இருக்கிறீர்களா என்று உங்களையே ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் உங்களையே சோதித்துப் பாருங்கள். கிறிஸ்து இயேசு உங்களில் குடியிருக்கிறார் என்ற உணர்வு உங்களுக்கு இல்லையா? அந்த உணர்வு உங்களில் இல்லாவிட்டால், நீங்கள் சோதனையில் தோற்றுப்போய்விட்டீர்கள் என்றே அர்த்தமாகும்.
6
நாங்களோ சோதனையில் தோல்வியடையவில்லை என்பது உங்களுக்கு வெளிப்படும் என்றே நம்புகிறேன்.
7
நீங்கள் தீமையேதும் செய்யாதிருக்கும்படியாக நாங்கள் இறைவனிடம் மன்றாடுகிறோம். நாங்கள் இப்படி மன்றாடுவது, நாங்கள் சோதனையில் வெற்றியடைந்தோம் என்று மக்கள் காணவேண்டும் என்பதற்காக அல்ல. நாங்கள் தோல்வியடைந்தது போலக் காணப்பட்டாலும், நீங்கள் நன்மையானதையே செய்யவேண்டும் என்றே, நாங்கள் மன்றாடுகிறோம்.
8
ஏனெனில், சத்தியத்திற்கு எதிராக நாங்கள் எதையும் செய்யமுடியாது. சத்தியத்திற்காக மட்டுமே எல்லாவற்றையும் செய்கிறோம்.
Settings