Skip to content
1 நாளாகமம் 9:1-9

1 நாளாகமம் 9:1-9

1
அப்படியே எல்லா இஸ்ரயேலின் வம்சாவழியும், இஸ்ரயேலின் அரசர்களின் பதிவேட்டில் எழுதப்பட்டன. யூதா மக்கள் உண்மையற்றவர்களாய் இருந்தபடியால் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டனர்.
2
தங்கள் சொந்த இடங்களில் உள்ள தங்கள் சொந்தப் பட்டணங்களுக்குத் திரும்பி வந்தவர்கள் சில இஸ்ரயேலரும், ஆசாரியரும், லேவியரும், ஆலய பணிவிடைக்காரருமே.
3
யூதா, பென்யமீன், எப்பிராயீம், மனாசே கோத்திரங்களிலிருந்து வந்து எருசலேமில் வாழ்ந்தவர்களின் பெயர்களாவன:
4
யூதாவின் மகன் பேரேஸின் வழித்தோன்றலில் வந்த பானியின் மகனான இம்ரியின் மகனான உம்ரி பெற்ற அம்மியூத்தின் மகன் ஊத்தாய்.
5
சீலோனியரைச் சேர்ந்தவர்கள்: முதற்பேறானவன் அசாயாவும் அவனுடைய மகன்களும்.
6
சேராவியரைச் சேர்ந்தவர்கள்: யெகுயேலும், யூதாவின் 690 மக்களும்.
7
பென்யமீனியரைச் சேர்ந்தவர்கள்: சல்லு என்பவன் அசெனுவாவின் மகனான ஓதாவியாவின் மகனான மெசுல்லாமின் மகன்.
8
எரோகாமின் மகனான இப்னேயா; மிக்கிரியின் மகனான ஊசியின் மகன் ஏலா; இப்னியாவின் மகனான ரேகுயேலுக்குப் பிறந்த செபத்தியாவின் மகன் மெசுல்லாம்.
9
பென்யமீனியர் அவர்களின் வம்சங்களின்படி, கணக்கிடப்பட்டபோது 956 பேராயிருந்தனர். இவர்கள் எல்லோரும் தங்கள் குடும்பங்களின் தலைவர்களாயிருந்தனர்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options