Skip to content
1 நாளாகமம் 27:25-31

அரச சொத்துக்களின் நிர்வாகிகள்

1 நாளாகமம் 27:25-31
25
அரச அரண்மனையின் களஞ்சியங்களுக்கு ஆதியேலின் மகன் அஸ்மாவேத் பொறுப்பாய் இருந்தான். சுற்றுப்புறங்களிலும், மாவட்டங்களிலும், பட்டணங்களிலும், கிராமங்களிலும், காவற்கோபுரங்களிலும் இருந்த களஞ்சியங்களுக்கு உசியாவின் மகன் யோனத்தான் பொறுப்பாய் இருந்தான்.
26
நிலத்தைப் பயிரிடுகிறவர்களான வயல்வெளியின் வேலை செய்பவர்களுக்கு கேலூப்பின் மகன் எஸ்ரி பொறுப்பாய் இருந்தான்.
27
ராமாத்தியனான சீமேயி திராட்சைத் தோட்டங்களுக்குப் பொறுப்பாய் இருந்தான். திராட்சைத் தோட்டங்களின் விளைச்சலைத் திராட்சைத் தொட்டிகளுக்கு சேர்ப்பதற்கு சிப்மியனான சப்தி பொறுப்பாய் இருந்தான்.
28
மேற்கு மலையடிவாரத்தில் இருந்த ஒலிவ தோப்புக்கும், அத்திமரங்களுக்கும், கெதேரியனான பாகால்கானான் பொறுப்பாய் இருந்தான். ஒலிவ எண்ணெய் விநியோகிப்பதற்கு யோவாஸ் பொறுப்பாய் இருந்தான்.
29
சாரோனில் மேயும் மந்தைகளுக்கு சாரோனியனான சித்ராய் பொறுப்பாய் இருந்தான். பள்ளத்தாக்குகளிலுள்ள மந்தைகளுக்கு அத்லாயின் மகன் சாப்பாத் பொறுப்பாய் இருந்தான்.
30
இஸ்மயேலனான ஓபில் ஒட்டகங்களுக்குப் பொறுப்பாய் இருந்தான். கழுதைகளுக்கு மெரொனோத்தியனான எகெதியா பொறுப்பாய் இருந்தான்.
31
ஆட்டு மந்தைகளுக்கு ஆகாரியனான யாசீஸ் பொறுப்பாய் இருந்தான். இவர்கள் எல்லோரும் தாவீது அரசனின் உடைமைகளுக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரிகளாவர்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options