சங்கீதம்120
Listen to this chapter
0:00
0:00
விடுதலைக்கான கூக்குரல்
1
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். நான் என் துன்பத்தில் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறேன்; அவர் எனக்குப் பதிலளிக்கிறார்.
2
யெகோவாவே, பொய்ப் பேசுகிற உதடுகளிலிருந்தும், வஞ்சக நாவுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றும்.
வஞ்சகரின் முடிவு
3
வஞ்சக நாவே, இறைவன் உனக்குச் செய்யப்போவது என்ன? அதற்கு மேலும் உனக்கு என்னதான் கிடைக்கும்?
4
போர்வீரனின் கூர்மையான அம்புகளினாலும், சூரைச்செடிகளை எரிக்கும் நெருப்புத் தழல்களினாலும் அவர் உன்னைத் தண்டிப்பார்.
பகைவர்களிடையே நாடுகடத்தப்பட்டதற்கான புலம்பல்
5
ஐயோ, எனக்குக் கேடு! நான் மேசேக்கிலே வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் குடியிருக்கிறேனே; கேதாரின் கூடாரங்களில் வாழ்கிறேனே!
6
சமாதானத்தை வெறுக்கிறவர்கள் மத்தியில் நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று.
7
நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்தையே தேடுகிறார்கள்.
Use ← → arrow keys to navigate
Settings
Reading Style
Typeface
Font Size px
Reading Width chars
Options
Study Note