Skip to content
சங்கீதம் 68:1-6

சங்கீதம் 68:1-6

1
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதமாகிய பாட்டு. இறைவன் எழுந்திருப்பாராக, அவருடைய பகைவர் சிதறடிக்கப்படுவார்களாக; அவருடைய எதிரிகள் அவருக்கு முன்பாகப் பயந்து ஓடுவார்களாக.
2
காற்றினால் புகை அடித்துச் செல்லப்படுகிறது போல, நீர் அவர்களை ஊதிவிடும்; நெருப்பின் முன்னே மெழுகு உருகுவது போல, இறைவனுக்கு முன்பாகக் கொடியவர்கள் அழிவார்களாக.
3
ஆனால் நீதிமான்கள் மகிழ்ந்து இறைவனுக்கு முன்பாகக் களிகூருவார்களாக; அவர்கள் சந்தோஷப்பட்டு மகிழ்வார்களாக.
4
இறைவனைப் பாடுங்கள், அவருடைய பெயருக்குத் துதி பாடுங்கள்; மேகங்களில் ஏறிப் போகிறவரை புகழ்ந்து உயர்த்துங்கள்; யெகோவா என்பது அவருடைய பெயர்; அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.
5
இறைவன் தமது பரிசுத்த வாழ்விடத்தில் தகப்பன் இல்லாதவர்களுக்குத் தகப்பனாகவும் விதவைகளுக்கு பாதுகாவலராகவும் இருக்கிறார்.
6
இறைவன் தனிமையானவர்களுக்கு குடும்பத்தை ஏற்படுத்துகிறார்; சிறைக் கைதிகளை விடுவித்து, செழிப்பான வாழ்வுக்குள் நடத்திச் செல்கிறார்; கலகக்காரரோ வெயிலால் வறண்ட நாட்டில் வாழ்கிறார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options