சங்கீதம் 40:8
சுற்றியுள்ள சூழலுடன் வசனம் 8 காட்டப்படுகிறது.
5
என் இறைவனாகிய யெகோவாவே, நீர் எங்களுக்காக செய்துள்ள அதிசயங்களும் உம்முடைய திட்டங்களும் அநேகம். உமக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை; அவைகளைக் குறித்து நான் விவரிக்கப்போனால், அவை எடுத்துரைக்க முடியாதளவு ஏராளமானவைகள்.
6
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; தகன காணிக்கைகளும் பாவநிவாரண காணிக்கைகளும் உமக்குத் தேவையில்லை; ஆனால் நான் கேட்டுக் கீழ்ப்படிவதற்கு என் செவிகளைத் திறந்துவிட்டீர்.
7
அப்பொழுது நான், “இதோ, நான் வருகிறேன்; புத்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறதே.
8
என் இறைவனே, நான் உமது விருப்பத்தைச் செய்ய விரும்புகிறேன்; உமது சட்டம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது” என்று சொன்னேன்.
9
மகா சபையில் உமது நீதியை பிரசித்தப்படுத்துகிறேன்; யெகோவாவே, நீர் அறிந்திருக்கிறபடி நான் என் உதடுகளை மூடுவதில்லை.
10
நான் உமது நீதியை என் உள்ளத்தில் மறைப்பதில்லை; உமது உண்மையையும், இரட்சிப்பையும் குறித்து நான் பேசுகிறேன். உமது உடன்படிக்கையின் அன்பையும் உண்மையையும் மகா சபைக்கு நான் மறைக்கவுமில்லை.
11
யெகோவாவே, எனக்கு இரக்கத்தைக் காட்டாமல் விடாதேயும்; உமது உடன்படிக்கையின் அன்பும் உமது உண்மையும் எப்போதும் என்னைப் பாதுகாப்பதாக.
Settings