Skip to content
சங்கீதம் 38:9-14

தனிமையும் உள்ளார்ந்த நம்பிக்கையும்

சங்கீதம் 38:9-14
9
யெகோவாவே, என் வாஞ்சைகள் எல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் பெருமூச்சும் உமக்கு மறைவாயில்லை.
10
என் இருதயம் படபடக்கிறது, என் பெலன் குன்றிப்போகிறது; என் கண்களும்கூட ஒளியிழந்து மங்கிப்போயிற்று.
11
எனது கூட்டாளிகளும் நண்பர்களும் என் புண்களின் நிமித்தம், என்னைச் சந்திப்பதைத் தவிர்க்கிறார்கள். என்னுடைய உறவினர்களும் என்னைவிட்டுத் தூரமாய் நிற்கிறார்கள்.
12
என்னைக் கொல்லத் தேடுபவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குத் தீமைசெய்யத் தேடுகிறவர்கள் என் அழிவைக் குறித்துப் பேசுகிறார்கள்; நாளெல்லாம் வஞ்சனையாய் சூழ்ச்சி செய்கிறார்கள்.
13
நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும், ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன்.
14
காது காதுகேட்காதவனும், தன்னுடைய வாயினால் பதிலளிக்க முடியாதிருக்கிற மனிதனைப் போலானேன்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options