சங்கீதம் 114:1-5
1
இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்தபோது, யாக்கோபின் குடும்பத்தார் வேறுநாட்டைச் சேர்ந்த மக்களிடமிருந்து வெளியே வந்தபோது,
2
யூதா, இறைவனின் பரிசுத்த இடமாயிற்று; இஸ்ரயேல் அவருடைய அரசாட்சி ஆயிற்று.
3
கடல் அவர்களைக் கண்டு ஓடி ஒதுங்கியது; யோர்தான் நதி அதின் வழியை மாற்றியது.
4
மலைகள் செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகள்போலவும் துள்ளின.
5
கடலே, நீ விலகி ஒதுங்கியது ஏன்? யோர்தான் நதியே, நீ ஓடாமல் நின்றது ஏன்?
Settings