எண்ணாகமம் 9:15-18
15
சாட்சிபகரும் கூடாரமான இறைசமுகக் கூடாரம் அமைக்கப்பட்ட நாளிலே மேகம் அதை மூடியது. மாலையிலிருந்து காலைவரை இரவு முழுவதும் அம்மேகம் இறைசமுகக் கூடாரத்திற்கு மேலாக நெருப்பைப்போல் காணப்பட்டது.
16
அப்படியே அது தொடர்ந்து இருந்ததால் மேகத்தால் மூடப்பட்டு இரவில் நெருப்பைப்போல் காணப்பட்டது.
17
அந்த மேகம் கூடாரத்தின் மேலிருந்து எழும்பும் போதெல்லாம், இஸ்ரயேலர் புறப்பட்டார்கள். மேகம் எங்கெல்லாம் நின்றதோ, அங்கெல்லாம் இஸ்ரயேலர் முகாமிட்டார்கள்.
18
இவ்வாறு இஸ்ரயேலர் யெகோவாவின் கட்டளையின்படியே புறப்பட்டு, அவருடைய கட்டளையின்படியே முகாமை அமைத்தார்கள். மேகம் இறைசமுகக் கூடாரத்தின் மேலாக இருக்கும்வரை அவர்களும் முகாமில் தங்கியிருந்தார்கள்.
Settings