Skip to content
எரேமியா 7:16-20

எரேமியா 7:16-20

16
“எரேமியாவே, நீ இந்த மக்களுக்காக மன்றாடவோ, அவர்களுக்காக எந்த வேண்டுதலையோ, விண்ணப்பத்தையோ செய்யவேண்டாம்; அவர்களுக்காக என்னிடம் பரிந்துபேசவும் வேண்டாம். ஏனெனில் நான் உனக்குச் செவிகொடுக்கமாட்டேன்.
17
யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் வீதிகளிலும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நீ காணவில்லையோ?
18
வான அரசிக்கு அப்பம் சுடுவதற்காக பிள்ளைகள் விறகு பொறுக்குகிறார்கள், தந்தையர் நெருப்பு மூட்டுகிறார்கள், பெண்கள் மாவைப் பிசைந்து அப்பம் சுடுகிறார்கள். அவர்கள் என்னைக் கோபம் மூட்டுவதற்காக, வேறு தெய்வங்களுக்குப் பானபலிகளைச் செலுத்துகிறார்கள்.
19
ஆனால் அவர்கள் என்னையா கோபமூட்டுகிறார்கள்? வெட்கக்கேடாக தங்களுக்கல்லவா தீங்கை வருவித்துக் கொள்கிறார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார்.
20
“ ‘ஆகவே ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: என் கோபமும் கடுங்கோபமும் இந்த இடத்தின்மேல் ஊற்றப்படும். அது மனிதர்மேலும், மிருகத்தின்மேலும், வெளிநிலத்திலுள்ள மரங்களின்மேலும், நிலத்தின் பலனின்மேலும் ஊற்றப்படும். அது ஒருவராலும் அணைக்க முடியாதபடி எரியும்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options