எரேமியா 35:1-3
1
யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீம் ஆட்சி செய்த காலத்தில், யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தையாவது:
2
“ரேகாபியரின் குடும்பத்தாரிடம் போய், அவர்களை யெகோவாவின் ஆலயத்தின் பக்க அறைகள் ஒன்றிற்கு வரவழைத்து, அவர்களுக்குக் குடிப்பதற்குத் திராட்சரசம் கொடு” என்றார்.
3
ஆகவே நான் அபசினியாவின் மகனான எரேமியாவின் மகன் யாஸனியாவையும், அவனுடைய சகோதரரையும், அவனுடைய எல்லா மகன்களுமான ரேகாபியரின் முழு குடும்பத்தாரையும் அழைக்கப் போனேன்.
Settings