ஓசியா 12:9-11
9
“உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவா நானே. நான் உங்களது நியமிக்கப்பட்ட பண்டிகையின் நாட்களில் இருப்பதுபோல, நான் திரும்பவும் உங்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணுவேன்.
10
அத்துடன் நான் இறைவாக்கினருடன் பேசி, அவர்களுக்கு அநேக தரிசனங்களைக் கொடுத்தேன்; அவர்களைக்கொண்டு உவமைகளினால் பேசினேன்.”
11
கீலேயாத் கொடுமையானதா? அதன் மக்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்; கில்காலில் காளைகளைப் பலியிடுகிறார்களா? அவர்களுடைய பலிபீடங்கள் உழுத வயலிலுள்ள கற்குவியலைப்போல் ஆகும்.
Settings