Skip to content
எசேக்கியேல் 34:16-21

எசேக்கியேல் 34:16-21

16
தொலைந்து போனவற்றை நான் தேடி, வழிதப்பிப்போனவற்றைத் திருப்பிக் கொண்டுவருவேன். காயம்பட்டவற்றை நான் கட்டி, பெலவீனமானதைப் பெலப்படுத்துவேன். ஆனால் கொழுத்ததையும் பெலமுள்ளதையும் நான் அழித்துப்போடுவேன். நான் நீதியின்படியே மந்தையை மேய்ப்பேன்.
17
“ ‘என் மந்தையே, ஆண்டவராகிய யெகோவா உன்னைக்குறித்து கூறுவது இதுவே: நான் செம்மறியாட்டுக்கும் செம்மறியாட்டுக்கும் இடையே நியாயந்தீர்பேன். செம்மறியாட்டுக் கடாக்களுக்கும் வெள்ளாட்டுக் கடாக்களுக்கும் இடையில் நான் நியாயந்தீர்ப்பேன்.
18
செம்மறியாட்டுக் கடாக்களே! வெள்ளாட்டுக் கடாக்களே! நல்ல பசும்புற்தரையில் நீங்கள் மேய்வது போதாதோ? மீதியான பசுந்தரையை உங்கள் கால்களால் மிதித்துப்போட வேண்டுமோ? தெளிந்த தண்ணீரைக் குடிப்பது உங்களுக்குப் போதாதோ? மீதியானவற்றை உங்கள் கால்களினால் கலக்கிச் சேறாக்க வேண்டுமோ?
19
என் மந்தை, நீங்கள் மிதித்துப்போட்டவற்றில் தின்று, உங்கள் கால்களினால் கலக்கியவற்றைக் குடிக்க வேண்டுமோ?
20
“ ‘ஆகையால் ஆண்டவராகிய யெகோவா அவர்களுக்கு கூறுவது இதுவே. இதோ பார்! கொழுத்த செம்மறியாடுகளுக்கும் மெலிந்த செம்மறியாடுகளுக்குமிடையில் நானே தீர்ப்பு வழங்குவேன்.
21
ஏனெனில் கொழுத்த செம்மறியாடுகளே, நீங்கள் பலவீனமான செம்மறியாடுகளையெல்லாம் உங்கள் கொம்புகளினால் முட்டி, தோளினாலும் விலாவினாலும் இடித்துத் தள்ளி, அவைகளைத் துரத்திவிட்டீர்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options