Skip to content
சங்கீதம் 75:1

சங்கீதம் 75:1

சுற்றியுள்ள சூழலுடன் வசனம் 1 காட்டப்படுகிறது.
1
“அழிக்காதே” என்ற இசையில் வாசிக்கும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம். இறைவனே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்; உமது பெயர் சமீபமாயிருப்பதால் நாங்கள் நன்றி செலுத்துகிறோம்; மனிதர் உமது அதிசயமான செயல்களைப்பற்றிக் கூறுகிறார்கள்.
2
இறைவனோ, “நியமிக்கப்பட்ட காலத்தை நான் தெரிந்துகொண்டு, நீதியாய் நியாயந்தீர்பேன்.
3
பூமியும் அதிலுள்ள எல்லா மக்களுடன் கரைந்துபோகின்றது; நான் அதின் தூண்களை உறுதியாய்ப் பிடித்துக்கொள்வேன்.
4
அகங்காரம் உள்ளவர்களைப் பார்த்து, ‘இனிமேல் பெருமை பேசாதிருங்கள்’ என்றும், கொடியவர்களைப் பார்த்து, ‘உங்கள் கொம்பை உயர்த்தாதிருங்கள்’ என்றும் சொல்கிறார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options