Skip to content
சங்கீதம் 16:5-8

தேவனே எனக்குப் பாதுகாப்பான பங்கு

சங்கீதம் 16:5-8

தேவனே எனக்குப் பாதுகாப்பான பங்கு

5
யெகோவாவே, நீரே எனது சுதந்திரம், ஆசீர்வாதத்தின் பாத்திரமுமாய் இருக்கிறீர்; எனது பங்கை பாதுகாப்பானதாய் ஆக்கியிருக்கிறீர்.
6
எனக்கான எல்லைப் பகுதிகள் இன்பமான இடங்களில் அமைந்துள்ளன; நிச்சயமாகவே மகிழ்ச்சியான உரிமைச்சொத்து எனக்கு உண்டு.
7
எனக்கு ஆலோசனை தருகின்ற யெகோவாவை நான் துதிப்பேன்; இரவிலும் என் இருதயம் எனக்கு அறிவைப் புகட்டுகிறது.
8
யெகோவாவையே எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படமாட்டேன்.

See also

Where else Scripture says this.

  • அப்போஸ்தலர் 2:25

    தாவீது கிறிஸ்துவைக்குறித்துச் சொல்லியிருப்பதாவது: “ ‘நான் கர்த்தரை எப்பொழுதும் என் கண்முன் வைத்துக்கொண்டிருக்கிறேன். அவர் எனது வலதுபக்கத்தில் இருக்கிறபடியால், நான் அசைக்கப்படமாட்டேன்.
    from verse 8
  • அப்போஸ்தலர் 2:28

    நீர் வாழ்வின் பாதைகளை எனக்குத் தெரியப்படுத்தியிருக்கிறீர். உமது சமுகத்தில் உமது மகிழ்ச்சியினால் என்னை நிரப்புவீர்’ என்பதே.
    from verse 8
  • சங்கீதம் 62:6

    அவரே என் கன்மலையும் என் இரட்சிப்பும் என் கோட்டையுமாயிருக்கிறார்; நான் அசைக்கப்படமாட்டேன்.
    from verse 8
  • சங்கீதம் 121:5

    யெகோவா உன்னைக் காக்கிறவர்; யெகோவா உன் வலப்பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார்.
    from verse 8
  • சங்கீதம் 73:23

    ஆனாலும், நான் எப்பொழுதும் உம்முடனே இருக்கிறேன்; நீர் என் வலதுகையை பிடித்துக்கொள்கிறீர்.
    from verse 8
  • சங்கீதம் 73:26

    என் உடலும் உள்ளமும் சோர்ந்துபோயிற்று; ஆனால் இறைவனே என்றென்றைக்கும் நீரே என் இருதயத்தின் பெலனும் எனக்குரியவருமாய் இருக்கிறார்.
    from verse 5
  • சங்கீதம் 110:5

    யெகோவா உமது வலதுபக்கத்தில் இருக்கிறார்; அவர் தமது கோபத்தின் நாளில் அரசர்களை தண்டிப்பார்.
    from verse 8
  • சங்கீதம் 109:31

    ஏனெனில் அவர் வறுமைப்பட்டவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறார்; அவனைக் குற்றவாளியாய்த் தீர்ப்பிடுகிறவர்களிடமிருந்து அவனுடைய உயிரைக் காப்பாற்ற நிற்கிறார்.
    from verse 8
  • சங்கீதம் 142:5

    யெகோவாவே, நான் உம்மை நோக்கிக் கதறுகிறேன்; “நீரே என் புகலிடம், வாழ்வோரின் நாட்டில் நீரே என் பங்கு” என்று நான் சொல்கிறேன்.
    from verse 5
  • புலம்பல் 3:24

    நான் எனக்குள் சொல்லிக்கொள்கிறேன், “யெகோவாவே என் உரிமைப் பங்கு; ஆகையால் நான் அவருக்காகக் காத்திருப்பேன்.”
    from verse 5
  • சங்கீதம் 23:5

    என் பகைவர்களின் சமுகத்தில் நீர் எனக்கென ஒரு விருந்தை ஆயத்தம்பண்ணுகிறீர். நீர் என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
    from verse 5
  • எரேமியா 3:19

    “நான், “ ‘உங்களை எவ்வளவு சந்தோஷமாக என் சொந்தப் பிள்ளைகளைப்போல் நடத்துவேன்; எந்த நாட்டினுடைய உரிமைச்சொத்தைப் பார்க்கிலும், மிக நலமான விரும்பத்தக்க ஒரு நாட்டை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்று நான், நானே சொன்னேன். நீங்கள் என்னை, ‘பிதாவே’ என்று அழைப்பீர்கள் என்றும், என்னைப் பின்பற்றுவதை விட்டுத் திரும்பமாட்டீர்கள் என்றும் நான் நினைத்திருந்தேன்.
    from verse 6
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options