Skip to content
லேவியராகமம் 20:27

ஆவிகளிடம் ஆலோசனை கேட்பதற்கான தண்டனை

லேவியராகமம் 20:27
சுற்றியுள்ள சூழலுடன் வசனம் 27 காட்டப்படுகிறது.
24
நீங்கள் அவர்களுடைய நாட்டை உரிமையாக்கிக்கொள்வீர்கள். “பாலும் தேனும் ஓடும் அந்நாட்டை உங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுப்பேன்” என்று உங்களுக்குச் சொன்னேன். மற்ற நாடுகளிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்திருக்கிற உங்கள் இறைவனாகிய யெகோவா நானே.
25
“ ‘ஆகையால் நீங்கள் சுத்தமான மிருகங்களுக்கும், அசுத்தமான மிருகங்களுக்கும் இடையிலும், சுத்தமான பறவைகளுக்கும், அசுத்தமான பறவைகளுக்கும் இடையிலும் வித்தியாசம் ஏற்படுத்துங்கள். உங்களுக்கு அசுத்தமென்று நான் விலக்கி வைத்த மிருகத்தினாலாவது, பறவையினாலாவது அல்லது தரையில் ஊரும் எதினாலாவது உங்களை அசுத்தப்படுத்த வேண்டாம்.
26
நீங்கள் எனக்குப் பரிசுத்தமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். ஏனெனில், யெகோவாவாகிய நான் பரிசுத்தராய் இருக்கிறேன். நீங்கள் என்னுடையவர்களாய் இருக்கும்படி, நான் நாடுகளிலிருந்து உங்களைப் பிரித்து வைத்திருக்கிறேன்.
27
“ ‘அஞ்சனம் பார்க்கிற அல்லது குறிசொல்லுகிற ஒரு ஆணோ, பெண்ணோ உங்களுக்குள் இருந்தால், அவர்கள் கொலைசெய்யப்பட வேண்டும். நீங்கள் அவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டும். அவர்களின் இரத்தப்பழி அவர்கள் தலைகளிலேயே இருக்கும்’ ” என்றார்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options