Skip to content
யோபு 32:15-22

யோபு 32:15-22

15
“அவர்கள் மனங்கலங்கி மேலும் எதுவும் சொல்ல முடியாதிருக்கிறார்கள்; அவர்களுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.
16
இப்பொழுது அவர்கள் மவுனமாகி ஒரு பதிலும் அளிக்க முடியாதிருக்கையில், நான் பொறுத்திருக்க வேண்டுமோ?
17
இப்பொழுது நானும் பேசியே தீருவேன்; நானும் எனக்குத் தெரிந்ததைச் சொல்வேன்.
18
பேசுவதற்கு என்னிடம் அதிக வார்த்தைகள் உண்டு, எனக்குள்ளிருக்கும் ஆவி என்னைப் பேசத் தூண்டுகிறது;
19
என் உள்ளம், தோல் குடுவையின் திராட்சரசத்தைப்போலவும், வெடிக்கப்போகும் புதுத் தோல் குடுவையைப் போலவும் இருக்கிறது.
20
நான் பேசி ஆறுதலடைய வேண்டும்; என் உதடுகளைத் திறந்து பதிலளிக்க வேண்டும்.
21
நான் யாருக்கும் பட்சபாதம் காட்டவோ, எந்த மனிதனுக்கும் முகஸ்துதி செய்யவோ மாட்டேன்.
22
நான் முகஸ்துதியில் திறமையுள்ளவனாய் இருந்தால், என்னைப் படைத்தவர் விரைவில் என்னை எடுத்துக்கொள்வாராக.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options